அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 26-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 25:1-13

இன்றைய புனிதர்

ஜோர்னெட்டின் புனித தெரசா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எனவே விழிப்பாயிருங்கள்: ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது. மத்தேயு 25:13

வார்த்தை வாழ்வாக:

விழிப்போடு இருக்க நமக்கு உணர்த்துகின்றார் இயேசு. எப்படிஎனில் இறையாட்சியில் நாம் இணைய நாட்களைத் தள்ளிக் கொண்டே போகாதீர்கள் நாளை என்று தள்ளி வைப்பது முட்டாள்தனம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதே அறிவுடமை. எனவே எப்போது என்ன நடக்கும் என்று யாருமே அறியார். அவ்வப்போது என்னென்ன இறையருளைச் சேமிக்க முடியுமோ அவற்றைச் சேமித்துக் கொள்ளவேண்டும். காலம் கடத்துவதால் அறிவிலிகளாகத் தான் நாம் இருப்போம். எனவே முன் தயாரிப்போடு காத்திருப்பது என்பது சுகமான அனுபவம் தான். கடைசி நேரத்தில் பார்க்கலாம் என்றிருப்பது விவேகமற்ற செயலாகும். துவகத்திலிருந்தே முழுமூச்சோடு இறையாட்சிக்காக உழைப்பது பெரும் மகிழ்ச்சியைத் தரும்

சுய ஆய்வு

  1. முன்மதியுடன் நான் செயல் படுகின்றேனா?
  2. இவ்வுலகச் சுகத்தை நம்பி அறிவிலியாக வாழ்கின்றேனா?

இறைவேண்டல்

முழுமுதல் தலைவா!முக்காலத்தையும் ஏற்றவரே! இக்காலச்சுழலில் நாங்கள் சிக்கிவிடமால் உமது அருள் கரத்தால் எம்மைத் தாங்கிக் கொள்ள வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு