அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 25-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 24:42-51

இன்றைய புனிதர்

புனித ஒன்பதாம் லூயிஸ், அரசர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். மத்தேயு 24:44

வார்த்தை வாழ்வாக:

இறைவன் மனிதனுக்கு வெளிப்படுத்தியவைகள் இரண்டு- 1. இறையாட்சியை இம்மண்ணில் தடம் பதிக்க 2. அந்த இறையாட்சியின் மேன்மைகுடிமகனாக,மகளாக வாழவே விரும்புகின்றர். அவரது இரண்டாம் வருகையின் போது தமது ஆட்சியின் நேர்மையாளர்களை மட்டும் இனம் கண்டு தனது ஆட்சியில் சேர்த்துக் கொள்வார். இந்த நிகழ்ச்சி தீடீரென நிகழும். எனவே எந்த நேரத்திலும் மானிடமகனை வரவேற்க தகுந்த ஆயத்ததோடு இருக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நாம் அவரது வருகையை ஏற்றுக் கொள்ள எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் நற்பணிபுரிந்தோர் அவரது சிம்மாசனத்தில் இடம் பெறுவர். தீமைசெய்தோர் புறந்தள்ளப்பட்டு அக்கினியில் தூக்கி ஏறிப்படுவர். எனவே விழப்பாயிருங்கள்.

சுய ஆய்வு

  1. இறைபணி ஆற்ற எனக்கு என்ன இடறல் வந்தாலும் ஏற்றுக் கொள்கின்றேனா?
  2. தான் பெற்றதைப் பிறருக்கும் பகிர்

இறைவேண்டல்

எமை ஆளும் எம் இறைவா! உமது இறையரசில் நாங்களும் ஓர் உறுப்பினராகும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு