அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 24-புதன்

இன்றைய நற்செய்தி

யோவான் 1:45-51

இன்றைய புனிதர்

திருத்தூதர் பார்த்தலமேயு நத்தனியேல் Apostle Bartholomew

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார். யோவான் 1:51

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பிலிப்பு நத்தானியேல் ஆகியோரை தம் மீட்புப் பணிக்கு அழைப்பு விடுக்கின்றார். பிலிப்பு த்தானியேலிடம் இறைவாக்கினர்கள் குறிப்பிட்டவரை நாங்கள் கண்டோம் என்றார். அவரே யோசேபின் மகன் இயேசு. அப்போது நத்தானியேல் "நாசரேத்தில் நல்ல எதுவும் நடக்கும் என்ற செய்தி இது தானோ?" என்று கூறினார். "வந்துபாரும்" என்று பிலிப்பு அழைப்பு விடுத்தார். நத்தானியேல் வருவதைக் கண்ட இயேசு "இவரே உண்மையான இஸ்ராயேலர் கபடமற்றவர்" என்று அவரைப் பற்றி இயேசு கூறியதைக் கேட்ட நத்தானியேலிடம் "உன்னைப் பிலிப்புக் கூப்பிடுவதற்கு முன்னே தெரியும். உன்னை அத்திமரத்திற்குக் கீழ் நிற்பதைக் கண்டேன்" என்றார். அன்பர்களே! ஒவ்வொரு படைப்பையும் அறிந்துள்ளார் இறைமகன். எனவே தான் நான் யார் என்பதை நான் தந்தையிடம் செல்லும்போது வானம் திறந்து வானதூதர்கள் என் மீது ஏறுவதையும் இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்.

சுய ஆய்வு

  1. இருவரின் அழைப்பு எத்தகையது?
  2. வானம் திறந்து வானத்தூதர்கள் ஏறுவதை இறங்குவதை நான் காண்பேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது இரண்டாம் வருகையின் போது உமது மாட்சிமையில் இணைந்திடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு