அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 23-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 23:23-26

இன்றைய புனிதர்

லீமா நகர் புனித ரோசா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும். மத்தேயு 23:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு குருட்டு பரிசேயரே என்று அவர்களை சாடுகின்றார். காரணம் அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லரைகளாக உள்ளார்கள். அவர்கள் வெளித் தோற்றத்தில் தூய்மையாக இருந்தாலும் அவர்களது அகமோ சாக்கடை போன்று அசுத்தம் நிறைந்த ஊற்றாக உள்ளது. அதை முதலில் அவர்கள் அகற்ற முடியாமல் வெளித் தோற்றத்தில் இருப்பது வெறும் பதரே! எதற்கும் உதவாத நிலையில் அவர்களது ஆன்மா உள்ளது. அன்புடையவர்களே, நாம் இன்றைய சூழலில் அகத்தை தூய்மையாக்குவோம். பிறகு புறம் தானே தூய்மை பெறும். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்ற பழமொழிகேற்ப வாழ்வோம்.

சுய ஆய்வு

  1. நான் வெளித்தோற்றத்தில் எந்த் நிலையில் என் மனம் உள்ளது?
  2. அகத்தை காண என் முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! அகமொன்றும் புறமொன்றும் இல்லாத ஒரே மனதிராக வாழ வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு