அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 22-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 23:13-22

இன்றைய புனிதர்

அன்னை மரியாள் விண்ணரசி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார். மத்தேயு16:22

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அகம் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் வெளிவேடக்காரரை பார்த்து கேட்கின்றார் - எப்படியெனைல் அன்று பரிசேயர், சதுசேயர் - மறைநூல் அறிஞர்கள் திருசட்டத்தை வைத்து தனக்கென்று எந்த சட்டமும் இல்லை. ஆனால் அடுத்தவரை ஒடுக்கி அடக்கி வந்தனர். அப்படிபட்ட நிலையிலிருப்பவருக்கு தான் இந்த கேள்வி. இந்த கேடு. எனவே இன்று நாம் ஏழை எளியவர் மீது பொய் சட்டத்தை திணித்து பொய்யாணை கூறி அவர்களை அழுத்த நினைக்கின்றோம். அவை நீடிக்குமானால் அவர்களை படைத்து அவர்களை மீட்டு அவர்களை பராமரித்து வரும் மூவொரு இறைவன் மீதே ஆணையிடுவதற்கு சமம். எனவே நாம் மனம் திறந்தவர்களாக அதில் மாசு மருவற்றவர்களாக வாழ்வோம் என்பதே இறைமகன் விருப்பம்.

சுய ஆய்வு

  1. நான் திறந்த மனதினனாக உள்ளேனா?
  2. எந்த நிலையிலிருப்பவரையும் ஏற்கும் பக்குவம் என்னில் உள்ளதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! அகமொன்றும் புறமொன்றும் இல்லாத ஒரே மனதிராக வாழ வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு