அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 21-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

லூக்கா13:22-30

இன்றைய புனிதர்

புனித பத்தாம் பயஸ், திருத்தந்தை

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். லூக்கா 13:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இறையரசில் யார் பங்கு கொள்ளமுடியும் என்பதை கூறுகின்றார். இவ்வுலகமெனும் பரந்தஇடத்தில் பல துன்பதுயரங்களை அனுபவித்து பல இடறல்களையும் கடந்து அடுத்தவர்க்காக போராடுபவர்களும் இதில் அடங்குவர். நாம் எப்பொதும் கோயிலிலும் - குருவோடும்- கன்னியர்களோடும் நட்புறவுடன் இருப்பதால் மட்டும்; இந்த இறையரசில் பங்கேற்க்க முடியாது. அடுத்தவர் நலன் கருதி உழைத்தவர்களே! இடுக்கமான வாயில் ஆன இயேசுவின் இறையரசில் தகுதி பெற்றவர்கள் ஆவார்.

சுய ஆய்வு

  1. நான் அடுத்தவரின் நலன் கருதி என்ன பணி செய்தேன்?
  2. இனிமேல் நான் எந்த நிலையில் வாழ்வேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே ! உமது அரசில் நானும் இணைய எனக்கு போதுமான பரந்த உள்ளத்தையும் உழைக்கும் வலிமையையும் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு