அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 19-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 22:34-40

இன்றைய புனிதர்

புனித ஜான் ஜுட்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன" என்று பதிலளித்தார். மத்தேயு 22-40

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, பரிசேயர், சதுசேயர்களின் கேள்விக்கு முழுமையான பதிலைப் பதிவு செய்கின்றார். திருச்சட்டநூலுக்குச் சிறந்த கட்டளை எது? என்ற கேள்விக்கு 1. உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆன்மவோடும், மனதோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வது 2. உன்னை அன்பு செய்வது போல, உனக்கடுத்திருப்பவர் மீதும் அன்புக் கூருவாயாக! இதுவே இறைவாக்கு நூல்கள் அனைத்திற்கும் திருசட்டம் அனைத்திற்கும் இந்தக் கட்டளைகள் பொருந்தும் என்று இறைமகன் பதிவு செய்கின்றார். காரணம் அவர்கள் திருச்சட்டத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தி, பிளவுபடுத்திக் கட்டளைகளைப் பல்வேறு கூறுகளாக மிகைபடுத்தி மோயீசன் கட்டளையின் உண்மைப் பரிமணத்தைப் புரிந்துக் கொள்ளமால் வாழ்ந்தக் காலம். எனவே ஒட்டுமொத்தக் கட்டளையின் நோக்கம் ஒரே கடவுள் -அன்புச் செய் என்று நலாசானாகப் பதிவு செய்கின்றார்.

சுய ஆய்வு

  1. திருசட்டம் என்றால் என்ன?
  2. அதன் கருப்பொருளை உணர்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மை அன்புச் செய்துபோல, அடுத்தவரையும் செய்யும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு