அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 18-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 22: 1-14

இன்றைய புனிதர்

புனித லூயிஸ் ஆல்பர்ட் ஹூர்டாடோ

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. மத்தேயு 22:3

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கின்றார். அதாவது திருமணம் என்றால் அங்கு இறைவன் முதல் கடைசித் தட்டிலுள்ள அனைத்து மக்களும் இடம் பெறுவர். எனவே தான் இறைமகன் அனைவரும் வாருங்கள், எனது விருந்தில் ஏற்றத் தாழ்வில்லை. ஆனால் தகுந்த ஆயத்தமுள்ளவர்கள் இடம் பெறலாம். அழைக்கப்பட்டோர் அனேகர் ஆனால் தேர்ந்துக் கொள்ளப்பட்டவர்ளோ ஒரு சிலர். அழைப்புப் பெற்றவர்கள் தகுதியின்மையிலிருந்தார்கள். அதனால் தான் அழைப்பை இழந்தார்கள். பங்குப் பெற்றவர்களோ வறியோராக இருப்பினும் தகுதியுடைமிருந்தமையால் இறையரசில் நிச்சயம் கிடம் பெற்றனர். எனவே நமக்கும் இதே அழைப்பை விடுக்கின்றார் இயேசு. நாமும் அதற்கான தகுதியில் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.

சுய ஆய்வு

  1. நான் எனது அழைப்பை உணர்ந்துள்ளேனா?
  2. அதற்கான தகுதியைப் பெற்றுள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது அழைப்பு என் செவிகளில் ஒலிக்கச் செய்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு