அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 17-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 20: 1-16

இன்றைய புனிதர்

புனித ஹெசிந்த்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ; என்றார். மத்தேயு 20-15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இரக்கத்தை நமக்கு சுட்டி காட்டுகின்றார் உவமை வாயிலாக. அதாவது ஒருவரது பணியின் ஊதியம் எவ்வளவோ அதை அவருக்கு உரிய விதத்தில் கொடுக்கின்றார். ஆனால் வேலையின்றி இருந்தவர்களுக்கும் நேரம் கருதாமல் அவர்களது நேர்மைக்கு ஈடாக அவர்களும் சமுதாயத்தில் பசியின்றி வாழ வேண்டும் என்பதை நமக்கு சமமாக கூலி கொடுத்து விளக்கம் தருகின்றார். ஏழைகளுக்கு பிச்சையிடுவது, வேலையின்றி இருப்பவனுக்கு வேலை கொடுப்பது இரக்கத்தின் வெளிப்பாடுகள். இதையே இறைமகன் நமக்கு உவமை வாயிலாக எடுத்து கூறுகின்றார். ஏற்போம்.

சுய ஆய்வு

  1. ஒருவரது துன்ப வேளையில் எனது பங்கு என்ன?
  2. அடுத்தவர் நலனில் எனது ஈடுபாடு என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! ஏழைகளுக்கு உதவும் பரிவிரக்கத்தை என்னுள் பதித்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு