அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 16-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 19:23-30

இன்றைய புனிதர்

புனித ஹங்கேரியின் ஸ்டீபன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்" என்று அவர்களிடம் கூறினார். மத்தேயு 19:30

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, மண்ணுலகில் பலர் முதன்மையான இருக்கைகளை விரும்பிப் பற்றிக் கொள்கின்றனர். ஆனால் விண்ணுலகில் இத்தகையோர் கடைநிலையைக்கூட அடைய முடியதாவர்களாவர். ஆனால் மண்ணுலகில் தமக்குள்ளதை சுயநலம் காணாமல் பொதுநலம் பேணுபவரும், தமக்காக அன்றி அடுத்தவர் வாழ்வின் பொருட்டு துன்பம் துயரம் அடைபவரும் விண்ணுலகில் இறையரசில் நுழைவர் என்பதற்கு சான்றாக இறைமகன் "முதன்மையானோர் கடைசியாவர். கடைசியானோர் முதன்மையாவர்" என்று கூறுகிறார். இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வுக்கு ஏற்ற பிரதிபலனை நமது தந்தை நமக்கு வழங்கி நம்மை நிறைவாழ்வை நோக்கி அழைத்துச் செல்வார் என்பதற்கே இச்சான்று என்பதை அறிவோம்

சுய ஆய்வு

  1. முதன்மையானோர் மண்ணக வாழ்வில் பெறும் பலனை அறிகிறேனா?
  2. கடைசியாவரின் விண்ணக வாழ்வின் பலனை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! மண்ணணகவாழ்வின் நான் செய்யும் அறச்செயல்களே மண்ணக வாழ்வின் நிலைவாழ்வு என்பதை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு