அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 15-திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 1: 39-56

இன்றைய புனிதர்

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு - இந்தியவிடுதலை நாள்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் ; என்றார். லூக்கா 1: 45

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் வார்த்தையை நம்பியவர் பேறு பெற்றவர் என்று எலிசபெத்தம்மாள் கன்னி மரியாளை வாழ்த்துகின்றார். "பேறு" என்றால் எவருக்குமே கிடைக்கப்பெறாத மாபெரும் பொக்கிஷம். மூவுலகின் மூவொரு இறைவன் இறைத்தன்மையை விட்டு மனித தன்மையோடு இப்பூவுலகம் நோக்கி பயணம் செய்த பட்டகம் தான் கன்னி மரியாள். தன் மகனை இவ்வுலகிற்கு அர்ப்பணிக்க இறைவன் வரைந்த வண்ண ஓவியமே அன்னை மரியாள். அவளை எந்தவித மாசும் அணுகா வண்ணம் ஏடேனியர் வழி வந்த யாவேயின் பட்டகமே கன்னி மரியாள். எனவே தான் எலிசபெத் தூய ஆவியினால் ஆட்க்கொள்ளப்பட்டு ஆண்டவரின் தாய் என்றும் "பேறு" பெற்றவள் என்றும் வாழ்த்துகின்றார். அன்னைமரியின் கருவிலே இருந்த குழந்தை இயேசுவும் எலிசபெத்தமாளின் கருவிலிருந்த திருமுழுக்கு யோவானும் அக்களிப்பால் துள்ளியதும் இறை சித்தமே!

சுய ஆய்வு

  1. மரியாளைப் போன்று சீடராக பணி செய்ய என் நிலை என்ன?
  2. எலிசபெத்தம்மாளின் வயதிலும் என் நிலை என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! மரியாவின் தொண்டுள்ளம் என்னிலும் ஊன்றப்பட்டு நான் அடுத்தவருக்கும் பணியாளராக வாழ வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு