அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு14-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

லூக்கா 12:49-53

இன்றைய புனிதர்

புனித மாக்சிமிலியன் கோல்பே

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். லூக்கா 12:50

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டும் என்பது என் ஆசை. அதாவது நீதி - நேர்மை - உண்மை - அன்பு - பகிர்வு - சமத்துவம் - சகேதாரத்துவம் போன்ற இறையரசின் விழுமியங்கள் சாகடிக்கப்பட்டுப் போட்டியும் - பொறாமையும் - சாதி -மதப் பிளவுகள் தோன்றி மனிதரை சின்னப் பின்னமாக்கும் நிலையைக் கண்ட இயேசு மேற்கண்ட நீதிக்காகப் போராட அழைப்பு விடுக்கின்றார். போராடித் தான் இறைமகன் மானிடருக்குத் தன் உயிரைக் கொடுத்து மீட்பை வாங்கித் தந்தார். ஆனால் அந்த மீட்பைத் தற்காத்துக் கொள்ள மானிடராகிய நமக்கு உத்வேகம் இல்லை - கட்டளைகளைக் கண்டும் காணாமல் இவ்வுலக வாழ்வே நமது நோக்கமாக இருப்பதால் அவர் புரட்சித் தீயை இவ்வுலகில் மூட்டி நீதியை நிலை நாட்டிட இறைகூவல் விடுக்கிறார்.

சுய ஆய்வு

  1. இறைமகனின் திருமுழுக்கின் மேன்மையை அறிகிறேனா?
  2. அதன்படி நான் வாழ எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது திட்டத்தின்படி நான் வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு