அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 13-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 19: 13-15

இன்றைய புனிதர்

புனித போன்சியன், புனித இப்போலித்துஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் இயேசு, ”சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்: அவர்களைத் தடுக்காதீர்கள்: ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார். மத்தேயு 19:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு சிறு பிள்ளைகளை தடுத்த தன் சீடர்களை கடிந்துக் கொள்கின்றார். ஏனெனில் சிறு பிள்ளைகள் எந்த வித சூது வாது அறியாதவர்கள். கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளம் கொண்டவர்கள். இவர்களே இவ்வுலகின் கடை எல்லை வரை ஆளக் கூடியவர்கள். இவர்கள் அனைவரையும் நல்ல பண்பட்ட நிலத்தில் விதைத்து முளைத்து ஒன்றுக்கு நூறாக பலன் தரக்கூடிய நல் முத்துக்கள். அவர்களை தொடர் பராமரிப்பு செய்து ஞானத்திலும் ஆக்கபூர்வமான செயல்களிலும் பயிற்றுவித்தால் இவர்களே சமுதாயத்தை சீர்ச்செய்து காப்பார்கள். இறுதியில் விண்ணரசின் முடிசூடா இறையாட்சி மன்னர்கள் என்பதை நாம் அறிய வேண்டும். எனவே குழந்தைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்தினராய் இருங்கள்.

சுய ஆய்வு

  1. நான் எனது பிள்ளைகளை எவ்வாறு வளர்க்கிறேன்?
  2. எதிர்கொள்ள இருக்கும் சவால்களை முறியடிக்க வழங்கும் அறிவுரை என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என் பிள்ளைகளை மட்டுமன்றி அனைத்து குழந்தைகளையும் ஏற்ற தாழ்வின்றி வளர்த்தெடுக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு