அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 8-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 17: 22-27

இன்றைய புனிதர்

புனித டோமினிக்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“ மற்றவரிடமிருந்துதான் “ என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், “ அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. மத்தேயு 17-26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு கோவில் வரித் தண்டுவோரைச் சாடுகின்றார். இறைமகன் தன் மக்களின் மேல் கொண்ட அன்பினால் இறைத் தன்மையினின்று இறங்கி வந்து அவர்களோடு உறவாடி அவர்களது துன்பங்களில் பங்கேற்று அவர்களுக்கு மீட்பு வழங்கினார் என்றால் அவரது பணி முழுவதும் தம் மக்களுக்கே என்பது விளங்குகின்றது. எனவே தான் பேதுருவிடம் வினாத் தொடுக்கின்றார். வரி என்பது யாருக்கு? வருந்தித் துன்படுவோருக்கா அல்லது அடுத்தவரின் பொருளைச் சுருட்டி சுகபோக வாழ்வைச் சுவைக்கும் கயவர்களுக்கா? என்று கேட்கின்றார். இருப்பினுன் தானும் இம்மண்ணுலகில் மனிதத் தன்மையோடு மக்களோடு இணைந்திருந்தையால் மீன் வயிற்றிலிருக்கும் ஸதாத்தேர் நாணயத்தைக் காணிக்வையாக வழங்க அனுமதிக்கின்றார்.

சுய ஆய்வு

  1. நான் என் கடமையிலிருந்து தவறுகின்றேனா?
  2. தான் வாழும் சமுதாயத்தோடு இணைந்திருக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் அடுத்தவரின் நலனில் அக்கறை காட்டும் நல் மனதினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு