அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 7- ஞாயிறு

இன்றைய நற்செய்தி

லூக்கா 12:32-48

இன்றைய புனிதர்

புனித கயட்டான்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும். லூக்கா 12:48

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, ஆயத்தமாய் இருங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்!! என்று நமக்கு அறைகூவல் விடுகின்றார். மனிதராகப் பிறந்த நம் அனைவருக்கும் ஒரு சில கடமைகளைக் கொடுத்துள்ளார். நமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகள் இரண்டு 1 ஓரே கடவுள் 2. உன்னை அன்பு செய்வது போல் உன் அயலானை அன்புச் செய்வதே என்பதை இங்கே சுட்டிகாட்டுகின்றார். அன்பு எனும்போது இங்கே இறையரசின் விழுமியங்கள் மேலோங்கியுள்ளது. அன்பு, நீதி, நேர்மை, பகிர்வு, சமத்துவம், சதோரத்துவம் போன்றவை மானிடரிடையே வாழ்வாகாமல் சுயநலம் காணும் போது இறைமகன் எச்சரிக்கின்றார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவரிடம் மிகுதியான அறச்செயல்களை எதிர்ப்பார்க்கின்றார். எனவே தான் திருமுழுக்கினால் அவரது உரிமை குடிமக்களான நாம் அவரது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்கிறோம்.

சுய ஆய்வு

  1. நான் பெற்றுக் கொண்ட கொடை எத்தகையது? அறிகிறேனா?
  2. பெற்றுக்கொண்டதிற்கு ஏற்பப் பலன் தருகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உமது திட்டத்தின்படி வாழ்ந்துக்காட்டும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு