அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 6-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 17:14-20

இன்றைய புனிதர்

ஆண்டவரின் உருமாற்றம்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"இயேசு அவர்களைப் பார்த்து, "உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து "இங்கிருந்து அங்குப் போ" என்றால் போகும்." மத்தேயு 17:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவிடம் ஒருவர் வந்து மண்டியிட்டு “ஐயா! என் மகனுக்கு இரங்கும்” என்று கூறி உமது சீடர்கள் அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை என்ற கூறியதும் இயேசு சீடர்களைப் பார்த்து இன்னம் எவ்வளவு நாள்க்கு நான் உங்களோடு இருக்கமுடியும்? என்று கூறி அந்தச் சிறுவனை இற்கே கொண்டு வாருமென்றார். வந்ததும் அந்தப் பேயைக் கடிந்துக்கொண்டதும் அது விலகிப் போயிற்று. சிறுவன் குணம் அடைந்தான். சீடர்கள் நாங்கள் ஏன் குணமாக்க முடியவில்லை என்று இயேசுவிடம் கூறியபோது இயேசு “உங்களிடம் கடுகளவு நம்பிக்கை இருந்தால் இம்மலையைப் பார்த்துப் பெயர்ந்து போ என்றால் அது பெயர்ந்து போகும்” என்று அவர்களது நம்பிக்கையைத் துரிதப்படுத்துகின்றார். ஆம் இறைவார்த்தை உயிருள்ளது. அது பாதளம் வரை பாயும், ஊடுருவும் என்ற நம்பிக்கை நம்மில் ஊற்றெடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாழவோம்.

சுய ஆய்வு

  1. நம்பிக்கை என்றால் என்ன?
  2. எனது நம்பிக்கை எத்தகையது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன். எனது நம்பிக்கையை ஆழப்படுத்தும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு