அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு5-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 16:24-28

இன்றைய புனிதர்

பனிமயமாதா திருவிழா / புனித ஒஸ்வால்டு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ”என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்”. மத்தேயு16:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களுக்கு மட்டுமல்ல நம்க்கும் தான் இந்த அழைப்பு எப்படியெனில் சுயநலமின்றி பிறர்நலம் பேணுபவராக இருத்தல் அவசியம். இன்றைய சூழலில் எங்கு பார்த்தாலும் பொன்னாசை, பொருளாசை ஓங்கி நிற்கின்றது. எனவே மனிதன் தன் நிலையை மறக்கின்றான். பலவழிகளில் பொருள் சேர்க்கின்றான். இப்படிப்பட்டவர்களை பார்த்து இறைமகன் என்னை தொடர்பவர்கள் நான் எதையெல்லாம் செய்தேனோ அதையெல்லாம் நீங்களும் செய்யுங்கள். நான் எவ்வாறு அடுத்தவருக்காக பாடுகள் பட்டு சிலுவை சுமந்தேனோ அதே போன்று நீங்களும் அடுத்தவரின் நலனுக்காக தன்னலம் துறந்து பணி பிரதிபலன் பாராமல் செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார். ஏற்போமா?

சுய ஆய்வு

  1. எனக்கு அடுத்திருப்பவரின் நிலைமையை அறிகின்றேனா?
  2. துணிந்து அவர்களுக்கு உதவிச் செய்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மை போன்று பரிவிரக்கம் கொண்டவராக மாற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு