அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 4-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 16:13-23

இன்றைய புனிதர்

புனித ஜான் மரிய வியான்னி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு: இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. மத்தேயு 16:18

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தனது சீடர் சீமோன் பேதுருவிற்கு ”தந்தை” வெளிப்படுத்தியதை உணர்கின்றார். எப்படியெனில் வாழும் கடவுளாகிய 'மெசியா" பேதுரு வழியாக வெளிப்படுத்தியதை உணர்ந்து இவரே திருச்சபையின் தலைவர், இவர் வழியாகக் கட்டப்படும் திருச்சபை என்றும் அசைக்க முடியாது என்பதை உணர்ந்தே சீமோனுக்குப் ”பேதுரு” என்று பெயர் வந்தது. இந்தக் கத்தோலிக்கத் திருச்சபையை இயேசுவின் பெயரால் பேதுருவின் தலைமையில் தொடங்கினார். எனவே தான் கத்தோலிக்க மதம் உலகளாவி உயர்ந்து நிற்கின்றது. ஆனால் சுயநலவாதிகள் பேராசையினால் இயேசுவின் பெயரால் வீதிக்கு இரண்டு மூன்று சபைகளை அமைத்து ஏழை எளியவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி இவ்வார்த்தை வியாபாரமாக்கப்படுகிறது. இதன் பிடியிலிருந்து காக்க வேண்டியது நமது கடமையாகும்.

சுய ஆய்வு

  1. நான் எனது படைப்பின் மேன்மையை உணர்ந்துள்ளோனா?
  2. என் அழைப்பிற்கேற்ப வாழ்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் உண்டாக்கிய திருச்சபையை விட்டுப் பிரிந்து போகும் உம் மக்களைக் கரை சேர்க்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு