அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 3-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 15:21-28

இன்றைய புனிதர்

புனித லீதிரா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. மத்தேயு 15:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, கானானியப் பெண்ணின் நம்பிக்கையைப் புடமிட்டு பார்க்கிறார். காரணம் இறைமகனின் வல்லச்செயல்கள் அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் வெற்றிக் கொள்கிறது. உம்மால் கூடும் என்ற விசுவாசம் நம்மில் ஊற்றெடுக்க வேண்டும். நற்செய்தி நான்கும் வலியுறுத்தும் செய்தி "நம்பிக்கை ஒன்றே". எனவே இஸ்ரேல் குலைத்தாருள் காணாமல் போன ஆடுகளைத் தேடியே வந்தார் இயேசு. எனவே தான் பிள்ளைகளுக்குப் போடும் உணவை நாய்களுக்கு... என்று சாதி, சமயம், இனத்தால் பிளவுபட்டு வாழும் மக்களுக்குச் சாட்டையடி கொடுக்கின்றார். "இருப்பினும் எசமானின் மேசையிலிருந்து விழும் ரொட்டிகளை நாய்கள் தின்று உயிர் வாழ்கின்றனவே" என்ற அப்பெண்ணின் நம்பிக்கை குரல் இயேசுவை "அம்மா உம் நம்பிக்கை பெரிது .நீர் விரும்பியவாறே உன் மகள் குணம் பெறுவாள்" என்று சொல்ல வைத்தது. இது சமயம் கடந்த நம்பிக்கை. இந்த நிகழ்வு சமயங்களைக் கடந்தும் பணியாற்றச் சான்றாகும்.

சுய ஆய்வு

  1. நம்பிக்கை என்னும் ஆற்றல் என்னிடம் எவ்வாறு உள்ளர்?
  2. கடந்து சென்று பணியாற்ற என் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தைகள் என் வாழ்வின் நம்பிக்கை கோட்டையாகத் திகழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு