அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 2-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 14:22-36

இன்றைய புனிதர்

புனித ஓசேபியஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? என்றார். மத்தேயு 14:31

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் சீடர்களின் நம்பிக்கையைச் சோதித்துப் பார்க்கின்றார். எனவே தான் அவர் ஜெபித்து விட்டு நான்காம் சாமத்தில் கடல் மீது நடந்து வருகின்றார். ஆனால் சீடர்களோ ஐயமுறுகின்றனர். அஞ்சாதீர், நான் என்று உங்களோடு என்று அவர்களுக்கு ஆறுதல் கூறிகின்றார். ஆனால் பேதுரு இறைமகனின் அழைப்பிற்கேற்பக் கடல் மீது நடக்கின்றார். ஆனால் அவரிடம் இறைமகனின் உடனிருப்பை மறந்த நிலையில் தான் கடலில் ஆழத்திற்குச் சென்கின்றார். அங்கே அவநம்பிக்கை மேலிடுகின்றது. எனவே தான் நம்பிக்கைக் கொண்டிருக்கப் பேதுருவுக்கும் மட்டுமல்ல நமக்கும் அழைப்பு விடுக்கின்றார். திருமுழுக்கின்வழியாக நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியார் நம்மிலும், நம் இறைமகனின் மறையுடலாகவும் இருக்கின்றோம் என்பதை நாம் மறந்துப் புற உலக ஆசைகளில் ஊன்றிக் கிடக்கின்றோம் என்பதை ஏற்போமா?

சுய ஆய்வு

  1. நான் இவ்வுலக வாழ்வை நிறை வாழ்வு என்று நினைக்கின்றேனா?
  2. அடுத்துப் பெறவிருக்கும் வாழ்வு எத்தகையது என்பதைச் சிந்திக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மில் நான் ஊன்றி வாழ்ந்திடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு