அருள்வாக்கு இன்று

ஜூலை31 - சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 14: 1-12

இன்றைய புனிதர்

St Ignatius of Loyola

புனித லொயோலா இஞ்ஞாசியர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஏனெனில் யோவான் அவனிடம், ”நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லிவந்தார். மத்தேயு 14:4

வார்த்தை வாழ்வாக:

இயேசுவின் போதனைகள் தவறுசெய்தவர்கள் அதனை இனங்கண்டுத் திருத்துவதே! அதனையே திருமுழுக்கு யோவான் ஏரோதை நோக்கி' நீ செய்வது தவறு" என்று துணிந்து சொல்கின்றார். நாமும் இன்றைய சூழலில் தவறு செய்பவர்களை இனங்காண்கின்றோமா? அப்படி அறிந்தாலும் தன் உயிரைக் காத்துக் கொள்ள நமக்கென்ன என்று ஒதுங்கிக் கொள்கின்றோமா? எந்தவகையை நாம் சார்ந்திருக்கின்றோம். சற்றுச் சிந்திப்போம். தன்சுயநலத்திற்காக அனேகர் பொன், பொருள் ஆசைக்காக மற்றவர்களின் தீச்செயலுக்குத் துணை போகின்றார்கள். அதனின்று விடுபட்டுப் புதிய சமுதாயம் படைப்போமா?

சுய ஆய்வு

  1. நான் குற்றம்புரிபவரின் கைப் பொம்மையாக இருக்கின்றேனா?
  2. குற்றத்தைச் சுட்டிக் காட்டி அடுத்தரை மனந்திருப்புகின்றேனா?

இறைவேண்டல்

நேர்மையாளரே, எம் இயேசுவே! எங்கேல்லாம் தீமைகள் நடக்கின்றதோ, அங்கெல்லாம் சென்று உம் மக்களின் நலனில் என்னை அர்ப்பணித்திட வரம் அருளும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு