அருள்வாக்கு இன்று

ஜூலை 30 - வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:54-58

இன்றைய புனிதர்

St. Peter Chrysologus

புனித பீட்டர் கிறிசோலோகா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை. மத்தேயு 13:58

வார்த்தை வாழ்வாக:

உவகையில் இறைமாட்சியின் மேன்மையை உணர்த்திய இயேசு, இறைவார்த்தைகளில் நம்பிக்கைக் கொள்வோரை நேசிக்கின்றார். அவர் தன் சொந்த ஊரில் தொழுகைக்கூடத்தில் விணிணரைச பற்றிப் போதிக்கின்றார். ஆனால் அங்கே நம்பிக்கையற்றவர்களைக் காண்கின்றார். எனவே பல வல்ல செயல்களைச் செய்ய மனமில்லாமல் செல்லுகின்றார். நாமும் இறைவார்த்தையை ஒவ்வொருக்கும் அருளுவோம். மக்களாகிய அவர்கள் உள்ளங்களில் விதைப்போம். அது பண்பட்ட நிலமாக இருந்தால் அஃது ஒன்றுக்கு முப்பது, நூறு மடங்குப் பலன் தரும். பண்படாத முட்செடிகளாக நம்பிக்கையற்றவர்களின் உள்ளங்களைப் போன்ற நிலமாக இருந்தால் அதுபலன் தராது என்பதை உணர்வோம். அப்படிப்பட்டவர்களையே தினம் தினம் நாடுவோம். இறைநம்பிக்கையை ஊட்டும் நற்செய்தியாளராக மாறுவோம். இறுதியில் வெற்றிக் காண்போம். இதுவே இயேசு நமக்கு உணர்த்தும் பாடம்.

சுய ஆய்வு

  1. நான் இறைவன்பால் நம்பிக்கைக் கொண்டுள்ளோனா?
  2. நான் கொண்ட நம்பிக்கையை அடுத்தவருக்கும் அளிக்கின்றேனா?

இறைவேண்டல்

நம்பிக்கை நாதனே எம் இயேசு! எம்மிடையே வாழும் உம் மக்களை உமது பாதத்தில் வைக்கின்றேன். அவர்கள் அங்கும் இங்கும் விசுவாசமின்றிச் சிதறி ஓடமால் உம் அருளை அறிந்தவர்களாக வாழ வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு