அருள்வாக்கு இன்று

ஜூலை 29- வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:44-46

இன்றைய புனிதர்

St Martha

புனித மார்த்தா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். மத்தேயு 13:50

வார்த்தை வாழ்வாக:

இயேசு இவ்வுலகை ஒரு கடலுக்கு ஒப்பிடுகின்றார். இங்கே நல்லவரும் தீயவரும் நிறைந்துள்ளனர். அவரது பார்வைத் தடம் மாறிப்போகும் மக்களையே சார்கின்றது. இவர்களை நல்லவர் பட்டியலில் சேர்க்கவே நம் போன்றவர்களை அழைக்கின்றார். போதனைகள், உவமைகள் மூலமாகச் சுட்டிக் காட்டுகின்றார். மனிதனோ இவ்வுலகில் நிலை என்ற மமதையில் மறுவாழ்வைச் சிந்திக்காமல் இவ்வுலகப் பொருட்களையே எண்ணித் தானும் அழிந்துää மற்றவரையும் சீர்கேட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். இதனைச் சிந்திப்போமா? எனெனிலில் யாரும் நிலையாக உலகில் இருக்கப் போவதில்லை. ஒரு நாள் அழிவு வரும், அப்போது நாம் எந்தப் பட்டியலில் இடம் பெறுவோம் என்பதைச் சிந்திக்கவே இவ்வுலக வாழ்க்கை. இதனைச் சரியாகப் பயன்படுத்தாவிடில் வாழ்வின் முடிவில் நரகம் எனும் தீச்சூளையில் தள்ளப்படும்போது தான் நம் தவறை உணர்வோம். எனவே தான் இயேசு எச்சரிக்கை விடுக்கின்றார் உவமைகள் மூலமாக.

சுய ஆய்வு

  1. விவிலிய வார்த்தைகளைக் கருத்துச் செறிவுடன் வாசிக்கின்றேனா?
  2. வாசித்ததைச் சிந்திக்கவும் தியானிக்கவும் கற்றுக்கொண்டுள்ளேனா?

இறைவேண்டல்

அன்புஇயேசு! நிலையற்ற இவ்வுலகை நிலையெனக் கருதி வாழும் அநேகரை உமது கரங்களில் வைக்கின்றேம். அவர்களுக்கு நிறைவாழ்வை நோக்கிப் பயணிக்கும் வரத்தைத் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு