அருள்வாக்கு இன்று

ஜூலை25 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 6: 1-15

இன்றைய புனிதர்

St James the Greater

புனித யாக்கோபு திருத்தூதர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

யேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.. யோவான் 6:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, இந்தநாளை வறியோர்கள் உடன் கொண்டாடுகின்றார். கலிலேயா கடலைக் கடந்து மறுகரைக்குத் திபேரியா கடல் சென்ற அவரோடு உடல் நலம் குன்றியோர் பலர் இருந்தனர். அவர்களுக்கு நலம் அளித்துக் கொண்டிருந்த வேளையில் மக்கள் கூட்டம் அதிகரிக்கவே, இவர்களுக்கு உணவு எங்கிருந்து வாங்கலாம் என்று யோசிக்கையில், அந்திரேயா, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருப்பதை அறிவித்தார். இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். இயேசு அப்பத்தை எடுத்து வானத்தை அண்ணாந்துப் பார்த்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்திருக்கோருக்குக் கொடுத்தார். பெண்கள் குழந்தைகள் நீங்கலாக ஆண்கள் மட்டும் ஐயாயிரம் பேர் உணவருந்தி, மீதமிருந்தவைகளைப் பன்னிரண்டு கூடைகளில் சேமித்து வைத்தனர். இதுவே இறைமகன் மனிதர் மீது கொண்ட பரிவு.

சுய ஆய்வு

  1. எனக்கடுத்திருப்பவர் பசியைத் துடைக்கிறேனா?
  2. துன்புறுவோரை நாடிச் செல்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உமது பரிவிரக்கத்தை எனக்கு வழங்கிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு