அருள்வாக்கு இன்று

ஜூலை 19 - திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 12:38-42

இன்றைய புனிதர்

St. Arsenius

புனித ஆர்செனியுஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம் மத்தேயு 12:38

வார்த்தை வாழ்வாக:

இயேசு தம் வாழ்வில் அனேக அற்புதங்களையும், அறிகுறிகளையும் செய்தார். இவர் எதற்காக இவ்வுலகிற்கு வந்தாரோ அதே நோக்குடன் ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை என இறைமாட்சி இம்மண்ணில் வந்தது. ஆயினும் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் "போதகரே அடையாளம் காட்டும்" என்று கேட்கின்றனர். கண்ணிருந்தும் அவர்கள் குருடர்கள். ஏனென்றால் அவர்கள் தான் என்ற அகந்தையினால் இவர்களுக்கு இயேசுவின் பணிகள் தெரியாமல் போகின்றது. எனவே இக்காலச் சூழலில் வாழ்கின்ற நாம் ஊன்கண் கொண்டுபாராமல் மற்றவர்களின் நன்மையே காணும் பேற்றைப் பெறுவோம். குற்றங்குறைகளைக் கலைந்து இயேசுவின் இறையாட்சியில் நுழைவோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உள்ளங்களில் ஊன்றுவோம். இயேசுவின் சாட்சிகள் ஆவோம்.

சுய ஆய்வு

  1. இயேசுயே எனக்குள் வைத்திருக்கும் பணி என்ன என்பதனை உணர்கின்றேனா?
  2. குறைகளைக் களைந்து நிறைகளை எற்றுக் கொள்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பான இயேசுவே! காலத்தின் அருங்குறிகளையும், அடையாளங்களையும் அன்றாட நிகழ்வுகளில் உணர்ந்து அதன்படி வாழ வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு