அருள்வாக்கு இன்று

ஜூன்13 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:38-42

இன்றைய புனிதர்

St. Anthony of Padua

பதுவை புனித அந்தோணியார்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.. மத்தேயு 5:42

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, யாரையும் பழிவாங்காதீர்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவர்களுக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள். பொறுத்து கொள்பவர் எவரும் தந்தையின் இல்லத்தில் முதன்மை இடத்தை பிடித்து கொள்வர் என்நிறார்,. இன்று பதுவா அந்தோனியார் திருவிழாவை தாய் திருச்சபை கொண்டாடி மகிழ்கின்றது. அவர் விவிலியத்தின் மீது கொண்ட தாகம், குழந்தை இயேசுவே அவரது மடியில் அமர்ந்து தான் விட்டுச் சென்ற பணிகளை குறிப்பாக ஏழை எளியோருக்கு - சமயம் கடந்து பணியாற்றி இறையரசை கட்டி எழுப்பு என்று பதுவா அந்தோனியாரின் கரங்களில் தவழ்ந்தார் இறைமகன். எனவே தான் புனித அந்தோனியார் சாதி, சமயம், இனம், மொழி கடந்து இன்று வரை வறியோரின் வள்ளலாக திகழ்கின்றார். இறைமகன் 33 ஆண்டுகள், பதுவா அந்தோனியார் 36 ஆண்டுகளில் அனைவரின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்து நாடி வருவோருக்கு முகம் கோணாமல் உதவி புரிகிறார்.

சுய ஆய்வு

  1. கேட்கிறவர்களுக்கு நான் என்ன செய்கிறேன்?
  2. முகம் கோணாமல் என்னிடம் இருப்பதை பகிர்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நாடி வருபவர்களுக்கு வாரி வழங்கிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு