அருள்வாக்கு இன்று

ஜூன்11- வெள்ளி

இயேசுவின் திருஇதயம் பெருவிழா
இன்றைய நற்செய்தி

யோவான் 19:31-37

இன்றைய புனிதர்

St. Barnabas

புனித பர்னபாஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"எந்த எலும்பும் முறிபடாது" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது."யோவான் 19:36

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் விலாவை யூதர்கள் ஈட்டியால் குத்திப் பார்த்தார்கள். இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவை நம் திருச்சபை கொண்டாடி மகிழ்கின்றது. “எந்த எலும்பும் முறிவுபடாது” என்ற மறைநூல் வாக்கு இங்கு நிறைவேறியது. இயேசுவின் திருஇருதயம் பாவிகளுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த தெய்வீக திருஇதயம். இவ்விதயம் பாவிகளை நோக்கியே நாளும் பயணிக்கின்றது. வறியோர்களின் துயரில் துடிக்கின்றது. மானிடருக்காகத் தன்னையே துறந்த தெய்வீக இதயம். எனவேதான் இறைவனின் எந்த எலும்பும் முறிவுபடாது. அதே வேளையில் “தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார்கள்” எனும் வரிகள் இன்று வரை இயேசுவின் திருஇருதயம் நமக்காகத் திறந்து வைத்து நம்மை வாஞ்சையோடு அழைக்கின்றார். தகுந்த தயாரிப்புடன் அவரில் தஞ்சம் புகுவோம்.

சுய ஆய்வு

  1. எந்த எலும்பும் முறிவுபடாதவரை அறிகிறேனா?
  2. திருஇருதயத்தில் தஞ்சம் புக என் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உம் திருஇருதயத்தில் நான் வாசம் செய்யும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு