அருள்வாக்கு இன்று

ஜூன்10 -வியாழன்

இன்றைய நற்செய்தி

5:20-26

இன்றைய புனிதர்

St. Getulius

புனித ஜெட்டுலியஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதர, சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். மத்தேயு 5:23-24

வார்த்தை வாழ்வாக:

நமது குடும்பங்களில் சிலர் மணவாழ்வில் பிரிவு, பிரச்சனைகள் ஏற்பட்டுப் பிரிகின்றனர். இதனால் உறவுகள் உடைந்துச் சிதைந்து போகின்றன. காரணம் பொருளாசை. அது தான் பிரித்து விடுகின்றது. இந்தச் சமுதாயத்தின் சீர்கேட்டைத் தான் இயேசு கண்டிக்கின்றார். அதற்குப் புதிய வழிமுறையும் கூறுகிறார். ஒப்புரவு, மன்னிப்பு, தியாகம் என்பவைகள். இதையே இறைவன் விரும்புகிறார். பலியாக இறைவன் விரும்புவது நெருங்குண்டத் தூயதோர் உள்ளத்தையே. புறத்தில் மட்டுமல்ல, அகத்திலும் தூய்மையை விரும்புகின்றார். மனதில் சமதானமும், பிறரன்பும் இல்லாமல் செலுத்தப்படும் எந்தக் காணிக்கையையும் தான் ஏற்பதில்லை என்ற பறைச் சாற்றுகின்றார்.

சுய ஆய்வு

  1. என்னையே பலியாகச் செலுத்த சான் தயராக உள்ளேனா?
  2. பிறரை மன்னிக்கும் மனப்பான்மை என்னில் உள்ளதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! காணிக்கையை விடத் தூய மனமே இறைவனுக்கு ஏற்புடைய பலி என்றீர். அவ்வாறே நானும் உம் பலிப்பொருளாக மாற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு