அருள்வாக்கு இன்று

ஜூன்09 -புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:17-19

இன்றைய புனிதர்

Saint EphremSaint Ephrem

புனித ஏபிரோம்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். மத்தேயு 5:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தி வாசகத்தின்படி, மோயீசன் சட்டங்களையும் , இறைவாக்குகளையும் இயேசுவின் நற்செய்திகளையும் போதிக்கிறவர்கள் வரை சிலர் தங்கள் போதனைகளுக்கேற்ப வாழ்வதில்லை சிலர் தங்கள் போதிப்பவற்றையே கடைபிடிக்கின்றனர். இரண்டாம் வகையோரே சிறந்தவர்கள். போதனைகளுக்கேற்பச் சாட்சிளாக வாழவே இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவும் 'இறைவாக்கினர் தம் சொந்தவீட்டில் மதிப்புப் பெறமாட்டார்” என்று கூறுகிறார். போதிப்பவர்களாகிய நாம் எப்போதும் நம் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு வாழவேண்டும். 'நினைத்ததைச் சொல்ல, சொல்லியதைச் செய்துகாட்டி வாழ்வதே உயர்ந்த வாழ்வு. விண்ணுலகிலும் உயர்ந்த இடத்தையும் அதிக மகிமையும் அடைவார்கள்.”

சுய ஆய்வு

  1. நான் மற்றவர்களுக்குச் சொல்வதைச் சுத்தமாகச் செய்கின்றேனா?
  2. இயேசுவின் கட்டளைகள் இரண்டையும் கடைபிடிக்கின்றேனா?

இறைவேண்டல்

என் ஆண்டவரே! நல்லோர் பயணித்த வழியிலேயே நான் பயணிக்கவும், நான் நேர்மையான பாதையில் மாசற்றவர்களாக வாழும் அருளினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு