அருள்வாக்கு இன்று

ஜூன்5 - சனி

இன்றைய நற்செய்தி

மாற்கு 12:38-44

இன்றைய புனிதர்

 St. Boniface of Mainz

புனித போனிஃபஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

'இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” மாற்கு 12:43

வார்த்தை வாழ்வாக:

நமது திருச்சபை வரையறுத்துக் கொடுக்கப்பட்டுள்ள வழிபாடுகளிலும் சரி செபங்களிலும், விதவைகளுக்காகச் செபிப்பது மிகமிக அரிதாகவே உள்ளது . அன்று பெண்களை அடிமைபடுத்திய யூதச் சமூகம் குறிப்பாகக் கைம்பெண்களை மதிக்காத அந்தச் சூழலில் யூதச் சமூதாயத்தைச் சுட்டிக் காட்டவே, விதவைப் பெண்ணின் காணிக்கையை மேலாகச் சுட்டிக் காட்டி உயர்த்துகின்றார். காரணம் அதிகாரவர்க்கம் குறுக்கு வழியில் சம்பாதித்தவற்றில் சிறிது காணிக்கைச் செலுத்துகிறார்கள். ஆனால் கைம்பெண்ணோ தன்னிடம் இருந்தவற்றை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகின்றாள். இங்கே தான் அவள் உயரிய வள்ளல் தன்மை மேலோங்கிநிற்கிறது. இதையே இறைவன் விரும்புகிறார். எப்படிஎனில் தன் மகன் தன்னையே முழுவதுமாக மனுகுலத்திற்கு அர்ப்பணித்தார். அப்படியே நாமும் மற்றவர்களுக்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணிப்போமா? அதற்காக இறைவேண்டல் புரிவோமா!

சுய ஆய்வு

  1. என்னைச் சார்ந்த குடும்பம் ,சமுதாயம் போன்ற இடங்களில் விதவைகளை மதிக்கின்றேனா?
  2. விதவைகளை மற்றவர் அவதூறுப் பேசும் போது அதைப்பற்றி அவர்களிடம் விளக்கி உணர்த்துகின்றேனா?

இறைவேண்டல்

என் இறைவா! எமது பார்வையில் தோன்றும் விதவைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டவும், அவர்களுக்கு உம் இறையனுபத்தை உணர்த்திட வரம் அருளவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின்மடல் முகப்பு