அருள்வாக்கு இன்று

ஜூன்4 - வெள்ளி

இன்றைய நற்செய்தி

மாற்கு 12:35-37

இன்றைய புனிதர்

St. Francis Caracciolo

புனித பிரான்ஸ் சராசியோலோ

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?" என்று கேட்டார். மாற்கு 12:37

வார்த்தை வாழ்வாக:

யூதர்கள் இயேசுவை 'மெசியா” என்று ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்கள் எதிர்பார்த்த மெசியா யூதகுலத்தில் உயர்ந்தக் குடியில் பிறப்பார் என்று எதிர்பார்த்ததே காரணம். ஆனால் இயேசுவே எளிமைவேடம் பூண்டு ஏழ்மையிலிருக்கும் தன் மக்களை மீட்கவே இம்மண்ணக மனித அவதாரம் என்பது இறைவனுக்கும் மட்டும் தான் தெரியும். ஏனேன்றால், தான் படைத்த மனித இனம் அதிகாரவர்க்கத்தால் அழிவுறுவதைக் கண்டு கதிகலங்கித் தன் மக்களை மீட்கவே தன் ஓரே மகனை அன்னை மரியாளின் வழியக அனுப்பினார். படைப்பு - இறைவன்- மீட்டவர்-இயேசு - பராமரிப்பவர் - தூய ஆவி! இப்புரிதல்களை நாம் புரிந்து அதன் படி வாழக் கற்றுக் கொள்வோம்.

சுய ஆய்வு

  1. நான் இயேசுவின் அன்புக் கட்டளைப் புரிந்து அதன்படி வாழ்கின்றேனா?
  2. கடவுளைப் பற்றி அறியாத மக்களுக்கு இறையனுபவத்திற்குத் தூண்டுகோலாக உள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இறைவா மூவொரு இறைவனை நான் அறிந்துப் புரிந்து மற்றவரோடு பகிர்ந்து வாழும் வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு