அருள்வாக்கு இன்று

ஜூன்3 - வியாழன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 12:28-34

இன்றைய புனிதர்

St. Charles Lwanga and Companions

புனித சார்லஸ் லுவாங்காவும் தோழர்களும்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக." மாற்கு 12:31

வார்த்தை வாழ்வாக:

இறையன்பு பிறரன்பும் ஒன்றோடென்று தொடர்பு உடையவை. இயேசு உம்மை எவ்வாறு பாசத்தோடு பராமரிக்கின்றோர்களோ! அதே போன்று உனக்கு அடுத்திருக்கின்ற அயலானை அன்பு செய்து அவனை மகிமைப்படுத்துவாயாக. எவ்வாறெனில் அயலான் என்பவன் தாழ்நிலையிலிருப்பவன் அடிமைபட்டவன் வறியவன் இவர்களைக் கடந்து சென்று அவர்களின் தேவைகளைக் குறிப்பறிந்;து உதவிடும் போது தான் உண்மையான அன்புப் பரிமாற்றம் காண்கிறது. இதையே இயேசு நமக்கு அன்புக் கட்டளையாக விடுக்கின்றார். இன்னும் ஒருபடி மேலே சென்று எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிபந்தனையற்ற அன்பாக இருக்கவேண்டும். என்றே இயேசு விரும்புகின்றார். நமது வானகதந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல் நாமும் நிறைவுள்ளவராக வாழ அமைப்பு விடுக்கின்றார்.

சுய ஆய்வு

  1. என் அன்றாட வாழ்வில் எப்படிபட்ட மக்களுக்கு ஆதரவுத் தருகின்றேன்?
  2. எனது இறையன்பு அடுத்தவரில் பிரதிப் பலிக்கின்றதா?

இறைவேண்டல்

அடுத்தவரின் வாழ்வுக்காகவே வானகமிருந்து இறங்கிவந்த இயேசுவே! நானும் பிறருக்காகக் கடந்து சென்று அன்பை நானும் பகிர்ந்து கொள்ளும் வரம் அருள மன்றாடுகிறேன். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு