அருள்வாக்கு இன்று

ஜூன்2 - புதன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 12:18-27

இன்றைய புனிதர்

Sts. Marcellinus and Peter

புனித மார்சலின், பீட்டர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால் தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். மாற்கு 12:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் சதுசேயர்களின் சாதுரியமும். பரிசேயர்களின் பச்சேந்திதனமும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.வழிமரபு பற்றி அவர்களின் புரிதல் இயேசுவின் விளக்கத்தால் தெளிவு பெறுகின்றது. அதாவது இறப்பிற்குப் பின் உயிர்ப்பு உள்ளதா? இது சதுயேர்களின் சமயபார்வைக் கேள்வி. பரிசேயர்கள் உயிர்த்தெழுதலையும்,மறுவாழ்வையும் முழுமையாகவும் நம்பியிருப்பவர்கள் -இப்படி இரு அணிகள் இயேசுவை எப்படியாவது சிக்க வைக்கவேண்டும் என்ற கொள்கையில் இருந்தார்கள். மோயீசன் சட்டத்தைக் கொண்டு அவரை மடக்கிவிடலாம் என்றிருந்தனர். ஆனால் இயேசுவோ இறந்தவர் உயிர்த்தெழும்போது விண்ணகத்தில் யாரும் பெண் கொடுப்பதுமில்லை -எடுப்பதுவுமில்லை. அங்கே உறவுகள் இல்லை என்றும் அங்கே அனைவரும் சமம் என்று சவுக்கடிக் கொடுக்கிறார். எனவே இவ்வுலகில் நாம் எதை விதைக்கிறோமோ அதையே மறுவாழ்விலும் அறுவடைச் செய்வோம். எனவே சகோதர,சகோதரிகளே! இவ்வுலக வாழ்வுச் சாதி இனம் மொழிகளைக் கடந்து உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்வாக அமைய வேண்டும் என்று இறைவன் அழைப்பு விடுக்கிறார்.

சுய ஆய்வு

  1. எனக்குபின் வரும் சந்ததியர் நேரியப் பாதையில் வளர நான் முயற்சிக்கின்றேனா?
  2. நான் எத்தகைய வழிமுறைகளை என் மரபினருக்கு வழங்குகின்றேன்?

இறைவேண்டல்

அம்மையப்பனே என் இறைவா!என் அழைப்பிற்கேற்ற அருள்வாழ்வை நானும் வாழ்ந்து மற்றவர்களையும் இறைஅருளில் நிறைந்திட வரம் வேண்டி மன்றாடுகிறேன்.

அன்பின்மடல் முகப்பு