அருள்வாக்கு இன்று

ஜூன்1 -செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மாற்கு 12:13-17

இன்றைய புனிதர்

புனித ஜஸ்டின்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

'சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” - மாற்கு 12:17

வார்த்தை வாழ்வாக:

நோயுற்றவனுக்கே மருந்து நோயற்றவனுக்கல்ல என்கிறார் இயேசு. அன்று யூதகுலம் வரிச்சுமையால் அடிமைபடுத்தப் பட்டிருந்தது. இயேசுவின் பணியோ விடுதலைக்காக இருந்தது. இந்நிலையில் தான் இக்கேள்வியை முன் வைத்தனர். இங்கே இயேசுவின் தன்நிலை விளக்கம் கொடுக்கபடுகிறது. 'என் அரசு இவ்வுலகைச் சார்ந்தது அன்று. அடிமைபடுத்தியோ மக்களிடம் வரிவாங்கும் அரசு அல்ல. என் அரசில் கொடுப்பதுமில்லை வாங்குவதுமில்லை. இவ்வுலக அரசிற்குறியவற்றைக் கொடுக்கும்போதும், ஆண்டவருக்குப் பணிந்து வாழும் போதும் மனிதன் வெற்றிக் கொள்கின்றான்” என்கிறார் இயேசு இம்மறைபொருள்மூலமாக..

சுய ஆய்வு

  1. ஆண்டவர் மட்டும் போதும் என்ற நிலையில் வீட்டுகடமைகளை மறந்தேனா?
  2. இயேசுவின் சிந்தனைகேற்றவாறுக் குடும்பத்தை இறைபணிக்குத் தூண்டுகிறேனா?

இறைவேண்டல்

இயேசுவே எம்மை ஆள்பவரே!நீர் மட்டும் தான் என்று வாழ்ந்த எனக்குக் குடும்பம், பங்குதளம், சமுதாயம் என்ற நிலைகளைக் கட்டிப் பணிபுரியத் தூண்டிய கிருபைக்காக நன்றி கூறுகிறோம். அதற்காய் பணிபுரியும் அருளை எமக்குத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு