அருள்வாக்கு இன்று

மே 31-திங்கள்

இன்றைய நற்செய்தி
புனித மரியா-எலிசபெத்தைச் சந்தித்தல்

லூக்கா 1:39-56

இன்றைய புனிதர்

புனித மரியா-எலிசபெத்தைச் சந்தித்தல்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? லூக்கா 1:43

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் தாய் மரியா எலிசபெத் அம்மாவை சந்திக்கத் தூய ஆவியால் ஆட்கொள்ப்பட்டு யூதேயா மலை நாட்டிற்கு விரைந்து செல்கின்றார். எலிசபெத் 6 மாதம் கர்ப்பம் என்பதை வானதூதரால் அறிந்துக்கொண்ட அன்னை அங்கே சென்றதும் எலிசபெத் முற்றிலும் தூயஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ”ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரைகள் என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள் இருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளிற்று.” அக்கணமே தனது ஜென்மபாவத்தைக் கழவி கொண்டது. ”ஆண்டவர் உமக்குச் சொன்னவை அனைத்தும் நிறைவேறும் என்று நம்பிய நீ பேறு பெற்றவள்” என்று மரியாவும் - எலிசபெத் சந்திப்பில் நடந்த இறைதிருவுளம் இங்கே மேலோங்கி நிற்பதை நாம் அறிகிறோம். வரலாற்றில் வானதூதரால் மங்களச் செய்தி பெற்றவர்கள் 1. செக்கரியா 2. மரியா. அவர்கள் மீட்பின் கருவிகள்.

சுய ஆய்வு

  1. எலிசபெத்தை மரியா வாழ்த்தியபோது நடந்ததை அறிகிறேனா?
  2. ஆண்டவரின் வார்த்தையை நம்பிய மரியாவின் மேன்மையை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது பிறப்பின் மேன்மையை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு