அருள்வாக்கு இன்று

மே 30-திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான். 16:29-33

இன்றைய புனிதர்

புனித ஜோன் ஆஃப் ஆர்க்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உலகில் உங்களுக்கு துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றிக் கொண்டுவிட்டேன் என்றார். யோவான். 16:33

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உலகில் நீங்கள் நற்செய்தியை மறைசாற்றும்போது அனேக துன்பங்களை நீங்கள் அடைவீர்கள். அதனை மேற்க் கொள்ள எனது உடனிருப்பு உங்களுக்கு உண்டு. துணையாளர் என்றும் உங்களை வழி நடத்துவார். அவரது ஆற்றலில் நீங்கள் இயங்குவீர்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம். துணிவுடன் இருங்கள் என்று நமக்கு ஆறுதல் அளிக்கின்றார். இந்த உலகில் எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டுப்போவதில்லை. எப்படி மாசற்றவராகக் பிறந்தோமோ அதேபோல் இவ்வுலகை விட்டு விலகும்போதும் மாசற்றவராகச் செல்லவே நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

சுய ஆய்வு

  1. நான் பற்றுள்ளவளாக இருக்கின்றேனா?
  2. உலக மாயை என்னவென்பதை உணர்ந்துள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்றும் துணிவோடு பணியாற்ற வரம் தாரும்.ஆமென்

அன்பின்மடல் முகப்பு