அருள்வாக்கு இன்று

மே 28-சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 16:23ஆ-28

இன்றைய புனிதர்

புனித ஜெர்மானுஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.யோவான் 16:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உருவகமின்றிப் பேசுகின்றார். அதாவது தன் தந்தையின் ஆணைப்படி இவ்வுலகில் வந்து தன் மக்களை அன்பால் கட்டி எழுப்பு அவர்கள் ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும் தந்தையிடம் செல்கின்றார். நமக்காகத் துணையாளரையும் அனுப்பித் திடப்படுத்துகின்றார். எனவே அன்பர்களே, நாம் நமது வாழ்வைத் தூய ஆவியாரின் வல்லமையோடு வளப்படுத்தி இனிமையாக வாழ வரம் பெறுவோம். இவ்வுலகை அன்பினால் கட்டுவோம். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவோம். இறையாட்சி மண்ணில் மலர நாம் கருப்பொருளாவோம்.

சுய ஆய்வு

  1. தந்தையை உணர்த்திய இயேசுவை ஏற்றுக் கொண்டேனா?
  2. அவரை அடுத்தவரில் காண்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! இவ்வுலகை வெல்லும் ஆற்றலை என்னுள் பொழிந்துத் திடப்படுத்தியருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு