அருள்வாக்கு இன்று

மே 27-வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான். 16:20-23அ

இன்றைய புனிதர்

புனித காண்டர்பரி அகுஸ்தீன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சியை அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.யோவான். 16:22

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தரும் மகிழ்ச்சியை யாரும் பிரிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்கின்றார். எப்படியெனில் இறைவன் தரும் மகிழ்ச்சி நிலையானது. அதை ருசிக்கவே அடையவே அதற்கான தகுதி உடையவர்கள் தான் பெற முடியும். அற்ப நிலையற்ற இந்த உலக சுகத்திற்காக எத்தனை சுரண்டல்கள் - தீவிரவாதங்கள் ஏற்ற தாழ்வுகள். இதனை நாம் ஒவ்வொரு நாளும் காணும் அனுபவிக்கும் இவ்வுலக மகிழ்வு நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் அழிந்து விடும். ஆனால் இறைமகன் தரும் மகிழ்ச்சியோ யாராலும் பிரிக்க முடியாது. அதற்கான பணியை மேற்கொள்வோம்.

சுய ஆய்வு

  1. மகிழ்ச்சி என்றால் என்ன?
  2. அதனை அடைய எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நிலையற்ற உலகின் மகிழ்ச்சியை விட நிலையான நிறைவான மகிழ்ச்சியை பெற வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு