அருள்வாக்கு இன்று

மே 26-வியாழன்

இன்றைய நற்செய்தி

யோவான் 16:16-20

இன்றைய புனிதர்

புனித பிலிப்பு நேரி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறான். நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். யோவான் 16:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உறுதியாகச் சொல்கின்றார். அதாவது அடுத்தவருக்காக நீங்கள் துன்புறுவீர்கள் புலம்புவீர்கள். அந்த வேளையில் அதிகாரத்திலிருப்பவர்கள் மகிழ்வார்கள். ஆனால் உங்களுடைய உழைப்பு வீணாகின்றதே என்று ஏங்கும் போது அது நற்பலனாக மாறும் என்பதே இதன் கருப்பொருள். அடுத்தவருக்காகத் தன் உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த கொடை வேறொன்றும் இல்லை என்று ஏற்கனவே இறைமகன் கூறியுள்ளார். எனவே நாம் நற்செயல்களுக்காகப் படுகின்ற துன்பம் மகிழ்ச்சியாக மாறும் என்பதை உறுதிப்படுத்துகின்றார்.

சுய ஆய்வு

  1. அடுத்தவருக்காக நான் மேற்கொள்ளும் முயற்சி யாது?
  2. அதனைச் செயல்படுத்த எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எனக்குள் இருப்பவரே என் துன்ப வேளையில் எனக்கு ஆறுதலாக இறங்கி வாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு