அருள்வாக்கு இன்று

மே 23-திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான். 15:26, 16:4

இன்றைய புனிதர்

புனித திருமுழுக்கு யோவான் தி ரோசி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன். யோவான் 16:4

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அன்றும் இன்றும் நீதிக்காகப் போராடுபவர்களைத் தள்ளி வைக்கின்ற நிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றதை நாம் அறிவோம். சமத்துவம், அமைதி இதனை வலியுறுத்துவோர்களைப் புறந்தள்ளிக் கொல்ல நேரிடும். இவை நடக்கின்ற போது இறைமகன் சொன்னவற்றை நினைவுபடுத்திக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இன்றும் கிறித்துவர்கள் பல நாடுகளில் படும் வேதனை இயேசு வார்த்தைகளை நினைவு கூற நமக்குச் சந்தர்ப்பமாக உள்ளது. எனவே இவ்வார்த்தைகளைப் படிப்பதும் போதிப்பதும் மட்டுமன்று வாழ்ந்து காட்டவே ஆசிக்கின்றோம். இதுவே இறைமகளுக்கு இயேசுவின் அறைகூவல்.

சுய ஆய்வு

  1. நான் என்னை அடுத்தவரின் நலனுக்காக அர்ப்பணிக்கின்றேனா?
  2. அதற்காக நான் கொடுக்கின்ற முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்றும் இவ்வார்த்தைகளின் படி வாழ வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு