அருள்வாக்கு இன்று

மே 22-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 14:23-29

இன்றைய புனிதர்

காசியாவின் புனித ரிட்டா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். யோவான் 14:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தாம் தந்தையிடம் சொன்னபடி செல்லவிருப்பதை இங்கே தம் சீடர்களுக்கு நினைவூட்டுகின்றார். கலங்க வேண்டாம். மருள வேண்டாம். தூய ஆவியாராம் துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். அவர் அனைத்தையும் கற்று தருவார். தந்தையின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர். தந்தை அனுப்புகின்ற ஆவியார் உலகம் இயங்கும் வரை நம்மில் இயங்குவார். அவரது அருள் பொழிதலால் உலகம் இயங்கும். நாமும் அவரது கொடைகளையும் வரங்களையும் பெற்று ஆற்றலோடு வாழ்வோம். நாம் எதை செய்ய வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்ற பலவிதமான அறச்செயல்களை நமக்குள் செய்து காட்டுவார். அவரது வழி காட்டுதலில் நாம் இயங்குவோம் என்பதை உணர்ந்த வாழ்வோம்.

சுய ஆய்வு

  1. தூய ஆவியாரை நான் அறிகிறேனா?
  2. அவரது ஆற்றல் என்னில் ஒளிர்ந்திட எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு மழலை இயேசுவே! துணையாளரின் ஆற்றலின் இயங்கிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு