அருள்வாக்கு இன்று
மே 19-வியாழன்
இன்றைய நற்செய்தி
யோவான். 15:9-11
இன்றைய புனிதர்

புனித பீட்டர் செலஸ்டின்
யோவான். 15:9-11
புனித பீட்டர் செலஸ்டின்
என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். யோவான். 15:11
இன்றைய நற்செய்தியில் இயேசு என் தந்தை உங்கள் மீது கொண்ட பேரன்பால் என் வழியாக தனது மக்களை காத்து வருகின்றார். அதேபோல் நான் உங்களுக்குயிடும் அன்பு கட்டளை மற்றவரை அன்பு செய்யுங்கள். அதாவது பிரதிபலன் பாராது அன்பு செய்யுங்கள். நலிந்தோருக்கும் அடிமைகளுக்கும் அன்பு செய்யுங்கள். அவர்கள் நலமுடன் வாழ உம்மால் முடிந்தவற்றை செய்யுங்கள். இதுவே நான் தரும் அன்பு கட்டளையாகும் என்கின்றார். எனவே நாமும் அவரது அன்பில் நிலைத்திருக்க அன்பால் இந்த சமுதாயத்தை கட்டி எழுப்புவோம். அன்பியம் என்பது இதன் அடிப்படையில் உருவானதே. இதனை நாம் மேற்கொள்வோம். அன்பு மக்களாய் வாழ்வோம்.
அன்பு இயேசுவே! உமது அன்பின் நான் என்றும் நிலைத்திருக்க நான் அயலானை அன்பு செய்வதே மேல் என்பதை உணரும் வரம் தாரும். ஆமென்.