அருள்வாக்கு இன்று
மே 18-புதன்
இன்றைய நற்செய்தி
யோவான். 15:1-8
இன்றைய புனிதர்

புனித முதலாம் யோவான்
யோவான். 15:1-8
புனித முதலாம் யோவான்
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். யோவான். 15:7
இன்றைய நற்செய்தியில் இயேசு நாம் அவருள் நிலைத்திருந்தால் மிகுந்த கனித் தருவோம் என்கிறார்;. எப்படியெனில் நாம் இறைவார்த்தைகளை பெயருக்கு படித்து ஆலயம் சென்று திருப்பலி கண்டு கடமை கிறித்துவர்களாக வாழ வேண்டாம். நான் உங்கள் இதயத்தில் குடியேற உங்கள் ஆன்மா தகுந்த ஆயத்ததோடு இருந்தால் மட்டுமே எனது உடனிருப்பை நீங்கள் உணருவீர்கள். இல்லையேல் கனிக் கொடாத கிளைகளை வெட்டி எரிவது போல உங்களையும் வெட்டி விடுவார்கள் என்பதை உவமை வழியாக விளக்குகின்றார். எனவே இயேசுவை நமது வாழ்வாக்குவோம்.
அன்பு இயேசுவே! திருமுழுக்கின் வழியாக இணைய எனது உடல் என்றும் உமக்கு உகந்த ஆலயமாக வாழ வரம் தாரும். ஆமென்.