அருள்வாக்கு இன்று

மே 16-திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 14:21-26

இன்றைய புனிதர்

புனித சிமியோன் ஸ்டாக்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்: நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.யோவான் 14-26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பெயரால் தந்தையின் தூய ஆவியாகிய துணையாளர் நமக்கு அனுப்புகிறேன் என்று இறைமகன் மொழிந்தார். அவ்வாறே தூய ஆவியானவர் நம்மில் உரைந்திருக்கிறார். அவரை நாம் இனம் காண வேண்டுமானால், நாம் பிறபயணத்தை அகற்றி அகத்துக்குள் பயணிக்க வேண்டும். அங்கே உரைந்துள்ள தீய எண்ணங்கள் கவர்ச்சி - மாயை "தான்" என்ற அகந்தை அனைத்தையும் அகற்றி, பயணிக்கும் போது உள்ளதுள் உரைந்திருக்கும் தூய ஆவி நம்மை வழி நடத்துவார் என்பது திண்ணம். நாமும் திருமுழுக்கின் வழியாக தூய ஆவியின் ஆலயமாகவும், இயேசுவின் மறையுடலாகவும் திகழ்கின்றோம் என்பதை மறவாதீர்.

சுய ஆய்வு

  1. நான் யார், என்னவாக இருக்கின்றேன் என்று ஆய்வு செய்துள்ளோனா?
  2. ஆய்வில் நான் செய்யும் போது நான் என்ன அறிவேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே நான் ஒரு புத்தகம், என்னுள் இருப்பதைப் பதிவு செயம் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு