அருள்வாக்கு இன்று

மே 15 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 13: 31-35

இன்றைய புனிதர்

புனித இசிதோர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். யோவான் 13:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், நம் வாழ்க்கையே ஒரு பயணம் தான். இந்தப்பயணத்தில் நாம் மகிழ்வோடு பயணிக்க வேண்டுமென்றால் தியாக அன்பு நம் அனைவரிலும் இருக்க வேண்டும். “நான் உங்களை அன்பு செய்தது போல நீங்களும் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்” என்ற இயேசுவின் அன்பு கட்டளையை நமக்கு எடுத்துரைக்கின்றது. பிறர் அன்பில் தம்மையே பலியாக்கத் தயாராகும் தியாக வாழ்வைத் தம் சீடர்களிடம் இயேசு எதிர்பார்க்கிறார். இயேசுவின் புதிய கட்டளையை வாழ்ந்து காட்டி, அன்பின் வழியாக நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்குச் சான்று பகர்கின்ற அழைக்கப்பட்டிருக்கிறோம்.

சுய ஆய்வு

  1. நான் அடுத்தவரை எவ்வாறு அன்பு செய்கிறேனா?
  2. நீங்கள் என் சீடர்கள் என்ற வார்த்தை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உமது அன்புச் சீடர்களைப் போல நாங்களும் என்றும் சீடர்களாக வாழ வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு