அருள்வாக்கு இன்று

மே 14-சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 15:9-17

இன்றைய புனிதர்

புனித மத்தியாஸ் திருத்தூதர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். யோவான் 15:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் என்றென்றும் நிலைத்திருப்பது போல், நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்து எனது அன்பில் என்றென்றும் நிலைத்திருக்க நமக்கு அன்பு அழைப்பு விடுக்கின்றார். இயேசு சுவைத்த தந்தையின் அன்பையும் சீடர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் சுவைக்க 33 வருட காலம், மரியின் வயிற்றில் உதித்து, தாய்மையின் சுவையை சுவைத்து, மழலையாக-சிறுவனாக-வாலிபனாக ஒவ்வொரு பருவத்திலும் தாம் பட்ட அனுபவங்களை நமக்குப் பகிர்ந்து, நாம் அதனைச் சுவைத்து, அதனை அடுத்தவருக்கும் பகிர்ந்தளித்து, இறை-மனித உறவில் அன்புருவாகி, இறைமகனின் அன்பில் நிலைத்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றார் என்பதை நாம் உய்த்துணர்ந்து இறைமையை அடைய என்ன நேர்ந்தாலும் தயங்காமல் தூய ஆவியாரின் ஆற்றலில் அகமகிழ்வோம்.

சுய ஆய்வு

  1. தந்தையின் கட்டளைகளை உணர்கின்றேனா?
  2. இறைமகனின் அன்பில் நிலைத்திருக்க என் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உமது இறைமையில் வளர்ந்திட வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு