அருள்வாக்கு இன்று

மே 13-வெள்ளி

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்

புனித பாத்திமா நகர் அன்னை மரியா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." என்றார். யோவான் 14:6

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தம் சீடர்களை நோக்கி அதே வேளையில் நம்மையும் பார்த்துக் கூறுகின்றார். உள்ளம் கலங்கவேண்டாம். என்னில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். நான் செல்லுமிடத்தில் நிறைய இருக்கைகள் உண்டு. உறைவிடங்கள் உண்டு. அறவழியைப் பின்பற்றி வாழும் நீங்கள் என்னை நோக்கி வருவீர்கள். நான் உங்களுக்காக உறைவிடங்களை ஏற்பாடு செய்துள்ளேன். நம்பிக்கையோடு வாருங்கள். ஏனெனில் நான் சென்று இடம் ஏற்பாடுசெய்து விட்டு வந்து உங்களை அழைத்துக் கொள்வேன். என்றும் நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கின்றார். வழியும் உண்மையும், வாழ்வும் நானே! என் வழியாய் வருபவர்கள் என்றும் நிலைவாழ்வைப் பெறுவார்கள். இறை- மனித -உறவில் சங்கமித்த இறையடிச் சேர்வோம்.

சுய ஆய்வு

  1. நான் உள்ளம் கலங்கி உள்ளேனா?
  2. வழியும் உண்மையும், வாழ்வும் நானே! என்றவரை அறிகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! வழியும், உண்மையுமான உம் பாதத்தில் வந்தடையும் வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு