அருள்வாக்கு இன்று
மே 12-வியாழன்
இன்றைய நற்செய்தி
யோவான் 13:16-20
இன்றைய புனிதர்

புனித நெரேபு, ஆக்கிலேயு, பஸ்கிராஸ்
யோவான் 13:16-20
புனித நெரேபு, ஆக்கிலேயு, பஸ்கிராஸ்
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். யோவான் 13:16
இன்றைய நற்செய்தியில் இயேசு, பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல, தூது அனுப்பப்பட்ட இறைமகன் தந்தையை விடப் பெரியவர் அல்ல என்று உறுதியாகப் பதிவு செய்கின்றார். இதன் கருப்பொருளை உணர்ந்து அதன்படி நாம் வாழ்வோமாகில் நாம் அனைவரும் பேறு பெற்றவர்கள் என்று நல்லாசானாய் சான்று பகர்கின்றார். இவ்வுலகில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு இரண்டும் உடன்பயணிக்கின்றன. இதில் எதை நாம் தேர்ந்து கொள்ள வேண்டும் என்று மறைநூல் வாக்குகள் உரைக்கின்றதோ, அதுவே நம் மீட்பின் கருவி என்பதனை உணர்ந்து இறைமகன் விட்டுச் சென்ற இறையாட்சி மணிகளைச் செவ்வனே செய்வோம் ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்தெறிந்துச் சமத்துவம் காண்போம்.
அன்பு இயேசுவே! நின் பணியால் இவ்வுலகம் மீண்டது என்னும் கருப்பொருளை உணர்ந்து வாழும்வரம் தாரும். ஆமென்.