அருள்வாக்கு இன்று

மே 6-வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான் 6:52-59

இன்றைய புனிதர்

புனித தோமினிக் சாவியோ

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்..யோவான் 6:55

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு எனது சதையை உண்டு, எனது இரக்கத்தைப் பருகுவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர் என்பதனைக் கேட்டவர்கள் இவரது சதையை எப்படி உன்னைக் கொடுக்க இயலும் என்று வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்ததைக் கேட்ட இயேசு எனது சதையை உண்டு, எனது எனது இரக்கத்தைப் பருகுவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். நானும் அவர்களை இறுதிநாளில் உயிர்ப்பிப்பேன் என்று இறைமகன் கூறுகிறார். உண்மைக்குச் சான்றுப் பகர்கின்றனர். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கின்றேன். எனது உடலை உண்போரும் நிலைவாழ்வு வாழ்வர். வாழும் தந்தையில் நானும் வாழ்கின்றேன். அவ்வாறே என்னை உண்போரும் வாழ்வர் என்று இறைமகன் நற்கருணையின் மேன்மையை இங்கே எடுத்துரைக்கின்றார்.

சுயஆய்வு

  1. உண்மையான நிலைவாழ்வைத் தரும் உணவை அறிகிறேனா?
  2. அதனைப் பெற என் தகுதியின்மையை உணர்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசு! உமது உடலைப் புசித்துப் புனித வாழ்வு வாழும் வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு