அருள்வாக்கு இன்று

மே 4-புதன்

இன்றைய நற்செய்தி

யோவான் 6:35-40

இன்றைய புனிதர்

புனித ப்ளோரின்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். யோவான் 6:37

வார்த்தை வாழ்வாக:

இன்றேய நற்செய்தியில் இயேசு இறைவன் தன்னிடம் ஒப்படைத்த அனைவரும் அதாவது தவறுகளை உணர்ந்துத் திருந்தி வருந்தி வந்து சேருவார். அதற்காகவே தான் தன் மகனே மண்ணகம் நோக்கி அனுப்பினார். எனவே இறைமக்களாகிய நாம் இன்றைய சூழலில் தொடரும் துன்பங்களைச் சகித்து இறைமகனின் பலியின் மணிமுடியாக ஏற்படுத்தியுள்ள அருட்சாதனங்களை முறையே கடைபிடிப்போம். இதையே தந்தையும் விரும்புகிறனார். கடைசிநேரத்தில் மனந்திரும்பிய வலதுப்புறக் கள்வனைப் போல் நாமும் மனம் மாறுவோம். மாட்சிமையில் பங்கு கொள்வோம். இதுவே இயேசுவின் ஆவல்.

சுய ஆய்வு

  1. நான் உமது ஆட்சியில் பங்குப் பெற என் முயற்சி யாது?
  2. இறையாட்சி என்றால் என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! தந்தையின் விருப்பத்தை ஏற்றுப் புவி இறங்கிய இயேசுவே! உமது ஆட்சியில் நானும் பங்குப் பெறும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு